Saturday, July 27, 2019

Why Income Tax Filing




WHY INCOME TAX FILE?

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் துறையிடம் தனி நபரோ, இந்து கூட்டுக் குடும்ப அமைப்போ, நிறுவனமோ, நிறுமங்களோ, எல்லோரும் முறையாக தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2018-19 நிதி ஆண்டுக்கு ஜூலை 31, 2019 தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருந்தது. ஆனால் அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு (ஆகஸ்ட் 31, 2019 வரை) வழங்கி உள்ளது.

Income Tax தாக்கல் செய்வது அவசியமா..? ஏன் ஒரு தனி நபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? Income Tax தாக்கல் செய்வதால் ஒருவருக்கு என்ன நன்மை? இந்த பதிவில் அதைப்பற்றி பார்க்கலாம்.

1. Refund: மாத சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கு, அவர்களுடைய மாதாந்திர வருமானம் அந்த நிதியாண்டில் வருமான வரம்பிற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய மாத சம்பளத்திலுருந்து வரி (TDS) பிடித்தம் செய்யப்பாட்டு, அவர்களுடைய PAN கணக்கில் வரவு வைக்கப்படும், மேலும் வங்கிகளில் Fixed Deposit செய்யும்பொழுது ஒரு வருடத்திற்கு Rs.10000/- க்குமேல் வட்டி வரும் பட்சத்தில் வங்கியானது வரி (TDS) பிடித்தம் செய்யப்பாட்டு, அவர்களுடைய PAN கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு பலரும் தங்களுக்கான வரி பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக் கூட பார்க்கத் தெரிவதில்லை. ஆகையால் வருமான வரி தாக்கல் செய்ய வரும் போது தான் கூடுதலாக செலுத்தி இருக்கும் வரியை முறையாக Refund பெற முடியும்..
2. Bank Loan: இன்று சொந்த வீடு, சொந்த கார் வாங்குவது எல்லாம் நம் சொந்த பணத்தில் சாத்தியமே இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. எப்படியும் வங்கிக்கடன் தான் வாங்க வேண்டும். இதற்கு நாம் வங்கியை அணுகும் பொழுது வங்கி உங்களிடம் முதலில் கேட்பது உங்களுடைய வருமான வரி தாக்கல் செய்ததற்கு உண்டான Proof தான், ஆகையால் Income Tax தாக்கல் செய்திருந்தால், நமக்கு கிடைக்க வேண்டிய கடன் கொஞ்சம் எளிதில் கிடைக்கும்.
3. நட்டக் கணக்கு: பங்குகளில் முதலீடு செய்து, ஏற்பட்ட நட்டத்தை அடுத்தடுத்த ஆண்டுகளில் Carry forward செய்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் பங்கு சார் வருமானத்துக்கு கழிவு பெற வேண்டும் என்றால், ஒவ்வொரு வருடமும் முறையாக Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
4. வருமான சான்று: அரசு அலுவலகங்களில் நம்முடைய வருமான சான்றாக, நாம் செலுத்திய Income Tax படிவங்களைக் காண்பிக்கலாம்.
5. Foreign Trip: ஒரு சில நாடுகளுக்கு செல்ல இருக்கும் பொழுது Passport உடன் Visa அவசியமாகிறது, தற்பொழுது Visa Apply செய்வதற்கு கூட வருமான வரி செலுத்திய Details கொடுத்தால்தான் Foreign செல்ல Visa கிடைக்கும்.
5. சட்ட சிக்கல்கள்: சில வருடங்களுக்குப் பின், ஏன் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நமக்கு நோட்டீஸ் விட்டு கேட்பதற்கு பதிலாக, நாம் இன்றே ஒழுங்காக வருமான வரி தாக்கல் செய்து நல்ல பிள்ளையாகி விடுவோமே. அதற்காக Income Tax தாக்கல் செய்யுங்கள்.

மேற்கூறியவை போக தங்களிடம் ஏதாவது ஒரு இடத்தில் Income Tax file செய்த Details கேட்டு இருந்தால் அதனை Comment Box-ல் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment