Monday, July 1, 2019

HOW TO CALCULATE TAX ON INCOME IN TAMIL


HOW TO CALCULATE TAX ON INCOME
சென்ற பதிவில் Taxable Income என்றால் என்ன என்பதை பார்த்தோம். இந்த பதிவில் Income Tax எவ்வாறு Calculate செய்ய வேண்டும், எந்த Income எல்லாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்ரும் என்பதை பார்க்கலாம்.

சென்ற பதிவில் ராஜேஷ் உடைய வருமானம் Rs.5,50,000/- என்று பார்த்தோம், இந்த வருமானத்தில் என்ன என்ன அடங்கியுள்ளது என்பதை பார்க்கலாம்.
1)      வருட சம்பளம்                                      -              Rs.4,30,000/-  
2)      PF பிடித்தம் செய்யப்பட்டது            -              Rs.21,600/-
3)      வாடகை மூலம் வருமானம்             -              Rs.96,000/-
4)      Bank Saving A/c Interest                           -              Rs.2,400/-
மொத்தமாக – Rs.5,50,000/-
இது போல தனிநபராக இருப்பின் அவருக்கு ஒரு வருடத்தில் வரும் அனைத்து விதமான வருமானங்களையும் அவரது Income –ல் காண்பிக்க வேண்டும். சென்ற பதிவில் தெரிவித்தபடி அவர் ஒருவருடத்தில் செய்த செலவுகளை கழிக்க வேண்டும். மேலும் செலவு செய்த தொகைக்கு Payment செய்ததற்கு உண்டான சரியான Receipt Copy வைத்துக்கொள்ள வேண்டும்.
வருட வருமானம்                                                        -             Rs.5,50,000/-
பள்ளி செலவு (-)                                                           -             Rs.40,000/- (Under 80C Section)
Life Insurance Investment (-)                                            -             Rs.20,000/- (Under 80C Section)
நன்கொடை (50% only) (-)                                           -             Rs.5,000/- (Under 80G Section)
Medical Insurance (-)                                                       -              Rs.15,000/- (Under 80D Section)
PF Deduction (-)                                                               -              Rs.21,600/- (Under 80C Section)
National Pension Investment (-)                                       -              Rs.25,000/- (Under 80CCD Section)
                                                                                              -------------------------------
Taxable Income                                                                  -             Rs. 1,26,600/-
                                                               
இந்த ராஜேஷ் உடைய Taxable Income 2018-19 –ம் வருடத்திற்கு என வைத்துக் கொள்வோம். ராஜேஷ்-ன் வயது 35. கீழே 2018-19-ம் வருடத்திற்கு உண்டான Tax Income Tax Percentage Table கொடுக்கப்பட்டுள்ளது.
Income Tax Slabs
Tax Rate for Individual & HUF Below the Age Of 60 Years
Up to ₹2,50,000*
Nil
₹2,50,001 to ₹5,00,000
5% of total income exceeding ₹2,50,000
₹5,00,001 to ₹10,00,000
₹12,500 + 20% of total income exceeding ₹5,00,000
Above ₹10,00,000
₹1,12,500 + 30% of total income exceeding ₹10,00,000

மேலே உள்ள Table படி Up-to Rs.2,50,000/- வரையிலான Taxable Income-களுக்கு Tax கட்ட தேவையில்லை, ஏற்கனவே நமது பதிவில் 2018-19-க்கு உண்டான Tax மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். மேலும் 2018-19-ம் வருடத்திற்கு Standard Deduction ஆக Taxable Income-லிருந்து Rs.40000/- கழித்துக்கொள்ளலாம் மற்றும் Taxable Income Rs.3,50,000/- க்குள் இருப்பின் Tax Amount-ல் இருந்து Rs.2500/- Rebate பெற்றுக்கொள்ளலாம்.

இதன்படி ராஜேஷ்-ன் Taxable Income Rs.1,26,600/- ஆக இருப்பதால் அவருக்கு Income tax 2018-19 வரி கட்ட தேவையில்லை.
Taxable Income                                  -              Rs.1,26,600/-
Standard Deduction (-)                      -              Rs.40,000/-
                                                                          ---------------
                                                                          Rs. 86,600/-
1st Slab for Nil Tax Rate (-)                             Rs.2,50,000/-

இதுவே Taxable Income Rs.3,50,000/- ஆக இருந்தால் Income Tax எந்த மாதிரி Calculate செய்யலாம் என பார்ப்போம்.
Taxable Income                                  -              Rs.3,50,000/-
Standard Deduction (-)                       -              Rs.40,000/-
                                                                -----------------------------
                                                                         Rs. 3,10,000/-
1st Slab for Nil Tax Rate (-)                              Rs.2,50,000/-
                                                                -----------------------------
                                2nd Slab for 5% Tax Rate                               Rs. 60,000/-
                                                                                                ===============
                                Rs.60,000/- க்கு 5% என கணக்கிட்டால் Rs.3,000/- Income Tax ஆக வருகிறது, இந்த Rs.3,000/- க்கு Education Cess 4% (Rs.120) சேர்த்து Rs.3,120/- Income Tax ஆக Payment செய்ய வேண்டும்.

இந்த Rs.3,120/- ஆனது Income Tax கட்ட வேண்டிய காலத்திற்குள் Payment செய்திருக்க வேண்டும், அவ்வாறு Payment செய்யாமல் இருந்தால் Rs.3,120/- க்கு Income tax-ல் கூறியுள்ளபடி Late Payment Interest உடன் Payment செய்யவேண்டி வரும். அடுத்த பதிவில் Income Tax Interest எவ்வாறு Calculate செய்யலாம் என்பதை பார்ப்போம்.

No comments:

Post a Comment