Wednesday, July 31, 2019

TDS Exemption Form 15G and Form 15H




FORM 15G/ 15H TDS EXEMPTION

Bank மூலம் வரும் வட்டி Rs.10,000/- க்கு மேல் செல்லும் பட்சத்தில், Bank TDS முறையில் வரியை பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள Interest நமது Bank Account-க்கு வரும், இது உங்களது வருட வருமானது Tax Basic Limit-ஐ விட குறைவாக இருந்தாலும் Bank-ல் TDS பிடித்தம் செய்வார்கள். இந்த சமயத்தில்  Form 15G அல்லது Form 15H ஆனது ஒருவருக்கு வரும் குறிப்பிட்ட Income லிருந்து TDS பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்க பயன்படுத்தலாம். இதற்கு PAN அவசியம். Form 15H ஆனது வயதானவர்கள் (Senior Citizen) மற்றும் Form 15G மற்ற அனைவரும் பயன்படுத்தலாம்.

Budget 2019-ல் Post Office மற்றும் Bank Deposit க்கு TDS பிடித்தம் செய்யப்படும் Interest Amount Limit Rs.10,000/- இருந்து Rs.40,000/- ஆகவும், வாடகைக்கு Rs.1,80,000/- இருந்து Rs.2,40,000/- ஆகவும் மாற்றம் செய்துள்ளார்கள்.

1) CONDITIONS FOR FORM 15G:-
a) Company மற்றும் Partner Ship Firm தவிர மற்ற அனைவரும் பயன்படுத்தலாம் (Individual, HUF, Trust, any other Assessee)
b) இந்திய குடியுரிமை பெற்றிருக்கவேண்டும்.
c) 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
d) வருடத்திற்குறிய Tax Nil ஆக இருக்க வேண்டும்.
e) உங்களுக்கு வரும் அந்த வருடத்தின் Interest ஆனது அந்த வருடத்திற்குறிய Basic Exempt Limit-க்குள் இருக்க வேண்டும். (Financial Year 2019-20 வருடத்தின் Basic Exempt Limit Rs.250000/-).

1) CONDITIONS FOR FORM 15H:-
a) தனிநபர் மற்றும் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்
b) 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். (Senior Citizen Only)
c) வருட வாருமானத்திற்குறிய Tax Nil ஆக இருக்க வேண்டும்.

கீழேகொடுக்கப்பட்டவைகளுக்கு Form 15G/ 15H கொடுத்து TDS Exemption பெற்றுக் கொள்ளலாம்.

1) TDS on EPF Withdrawal: EPF வைப்புநிதியிலிருந்து பணம் பெற 5 வருடங்களுக்குள் மற்றும் Rs.50,000/- க்கு மேல் விண்ணப்பித்தால் TDS கழித்தது போக உள்ள பணம் தான் Bank Account-க்கு வரும், இதனை தவிர்க்க Form 15G/ 15H EPF Withdraw விண்ணப்பிக்கும் போதே உடன் Submit செய்தால் TDS பிடித்தம் செய்யமாட்டார்கள்.
2) TDS on income from Corporate Bonds: நீங்கள் Corporate Bond வைத்திருந்து அதன் மூலம் Rs.5,000/- க்கு மேல் Income வரும் பட்சத்தில் TDS பிடித்தம் செய்வார்கள். இதனை தவிர்க்க அந்த நிறுவனத்திற்கு உங்களது Form 15G/ 15H கொடுத்து TDS பிடித்தம் செய்வதை தவிர்க்க சொல்லலாம்.
3) TDS on Post office Savings & Bank Deposit: 01.04.2019 முதல் Bank Deposit மற்றும் Post Office Savings Account மூலமாக வரும் Interest ஒருவருடத்தில் Rs.40,000/- க்கு மேல் உள்ள பட்சத்தில் Form 15G/ 15H கொடுத்து TDS பிடித்தம் செய்வதை தவிர்க்கலாம்.
4) TDS on Rent: 01.04.2019 முதல் TDS on Rent Rs.2,40,000/- ஆக உயர்த்தியுள்ளார்கள், உங்களது வருட வருமானத்திற்கு Tax கட்ட வேண்டியது இல்லை என்றால், Form 15G/ 15H கொடுத்து TDS பிடித்தம் செய்வதை தவிர்க்க சொல்லலாம்
5) TDS on Insurance Commission: Insurance Agent-க்கு ஒரு வருடத்தில் வரும் Insurance Commission ஆனது Rs.15,000/- க்கு மேல் செல்லும் பட்சத்தில் TDS பிடித்தம் செய்வார்கள், எனவே Form 15G/ 15H கொடுத்து TDS பிடித்தம் செய்வதை தவிர்க்கலாம்.

இந்த Form 15G அல்லது Form 15H ஐ Income Tax –க்கு சமர்ப்பிக்க தேவையில்லை, TDS பிடித்தம் செய்பவருக்கு கொடுத்தால் போதுமானது.

No comments:

Post a Comment