GST INPUT TAX CREDIT TAKEN DUE
DATE
GST சம்பந்தமாக
கடந்த 24.06.2019 அன்று குஜராத் ஹைகோர்ட் AAP & Company, Chartered
Accountants v/s Union of India வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்று
வழங்கியுள்ளது. தற்பொழுது நடைமுறையில் நாம் File செய்து வரும் மாதாந்திர ரிடர்ன்
GSTR3B GST Return இல்லை எனவும், Section 39-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி GSTR-3 மட்டுமே
மாதாந்திர Return என தீர்ப்பு வழங்கியுள்ளனர், அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில்
18-10-2018 அன்று September-2018 மாதத்திற்கு உண்டான GSTR3B file செய்ய வேண்டிய கடைசி
தேதி 20-10-2018 எனவும், 2017-18-ம் வருட GST உள்ளீட்டு வரி (GST Input Tax) Claim
செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் தினசரி நாளிதலில் Central Board of
Indirect Taxes and Customs (CBIC) விளம்பரப்படுத்தியிருந்தனர். இந்த விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு
குழப்பம் ஏற்ப்பட்டது, ஏனென்றால் Section 39 of CGST Act 2017 படி GSTR3 க்கு Return மாற்றாக GSTR3B கொண்டுவந்ததுபோல இருந்தது.
GST வழக்கறினர்களின் வாதம்:
1) Section 16(4) of CGST Act
2017 படி ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பில்களுக்கு GST உள்ளீட்டு வரி பெறும் கடைசி தேதி
என்பது அந்த வருடத்தின் Section 39-ன் படி கடைசி மாத Return அல்லது அந்த வருடத்தின்
Annual Return, எது முதலில் File செய்கிறோமே அதுவே கடைசி தேதியாகும்.
2) Section 39 படி எந்த ஒரு பெயரும்
Return-களுக்கு கொடுக்கப்படவில்லை, மேலும் 1) விற்பனை மற்றும் கொள்முதல் 2) உள்ளீட்டு
வரி 3) செலுத்த வேண்டிய வரி ஆகியவை ஒரு ரிடர்ன் படிவத்தில் இருந்தால் அது Section
39 படி ரிடர்ன் ஆக ஏற்றுக்கொள்ளப்படும்
3) Form GSTR3B-ல் மேலே கூறியுள்ளபடி
அனைத்தும் கொண்டுள்ளது எனவே GSTR3B ரிடர்ன் என எடுத்துக்கொள்ளலாம்
4) Order No: 12/2018 Central
Tax Dated 31-12-2018 படி உள்ளீட்டு வரி பெற கடைசி தேதி மார்ச்-2019 என அதிகப்படுத்தி
உள்ளது
குஜராத் ஹைகோர்ட் சாரம்சம்:
1) Section 39 படி GSTR3B ரிடர்ன்
file செய்தால் மட்டுமே 18-10-2018 அன்று தினசரி நாளிதலில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில்
கூறியுள்ளது படி உள்ளீட்டுவரி பயன் பெற கடைசி தேதி ஆகும்.
2) GST மென்பொருள் (GST
Software) குறைபாட்டால் GSTR2 மற்றும் GSTR3 file செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3) GSTR2 மற்றும் GSTR3 ரிடர்ன்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், GSTR3B Return உருவாக்கப்பட்டது, மேலும் இது
GSTR3 ரிடர்ன்க்கு மாற்றாகவே கொண்டுவரப்பட்டது.
4) Section 39 படி GSTR3
Return file செய்ய வேண்டிய காலக்கெடுவை Central Board of Indirect Tax and Customs
(CBIC) ஆனது அவ்வப்போது Order/ Notification கொடுத்து மாற்றி வருகிறார்கள்.
குஜராத் ஹைகோர்ட் தீர்ப்பு:
செக்சன்
39 படி GSTR3B படிவம் மாதாந்திர படிவமாக ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் 18-10-2018
என்று CBIC ஆல் கொடுக்பட்ட விளம்பரம் Section 16(4) மற்றும் Section 39(1) க்கு எதிரானது
எனவும் தீர்ப்பு கொடுத்துள்ளனர்.
மேற்கூறிய தீர்ப்புபடி பார்த்தால்
GSTR3B படிவம் மாதாந்திர ரிடர்ன் இல்லை என்று ஆகும் பொழுது, 1) மார்ச் 2018-ம் மாதத்திற்கு
உண்டான GSTR3 Due Dateஅல்லது 2) 2017-18-ம் வருடத்திற்கு உண்டான Annual Return due
date, இதில் எந்த தேதி முதலில் வருகிறதோ அந்த தேதியானது 2017-18 ஆம் வருடத்திற்கு உண்டான
உள்ளீட்டு வரி பயன் பெற கடைசி தேதியாகும், தற்பொழுது மார்ச் 2018-ம் மாதத்திற்கு உண்டான
GSTR3 Due Date இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் 2017-18 க்கு உண்டான
Annual Return Due date ஆனது 31-08-2019 அன்றுடன் முடிவதாக உள்ளது. எனவே 31-08-2019
வரை 2017-18 ஆம் வருடத்திற்கு உண்டான உள்ளீட்டு வரியை அனுபவிக்கலாம் என மறைமுகமாக தீர்ப்பில்
உள்ளது.
மேலே சொன்னவை எனது கருத்தாகும்,
இதனை தங்களது GST Legal Advisor-இடம் கேட்டு உறுதிப்படித்திக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை
எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சந்தேகங்கள் இருந்தால் கமென்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.

No comments:
Post a Comment