Sunday, June 30, 2019

Income Tax Taxable Income in Tamil



TAXABLE INCOME  ON INCOME TAX
சென்ற பதிவில் Taxable Income-க்கு மத்திய அரசின் பரிந்துரைப்படி Yearly Budget-ல் கொடுக்கப்பட்டுள்ள Tax Percentage ஐ பொருத்து Tax calculate செய்யப்படும் என்பதை பார்த்தோம். இந்த பதிவில் Taxable Income என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.

ஒரு தனிநபர் அல்லது Company-க்கு Yearly (Salary or Sales) மூலம் வருமானம் சம்பாதிப்பர். இப்படி வரும் Income அனைத்தும் Income என்று மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும். மேலும் அந்த வருடத்தில் தனிநபருக்கு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செக்சன் படி எதாவது செலவு செய்திருந்தாலும், கம்பெனிகளுக்கு செய்யும் செலவுகளையும், Income-ல் கழித்து வரும் Amount Taxable Income என எடுத்து கொள்ளப்படும்.

உதாரணமாக ராஜேஷ் என்பருடைய வருட வருமானம் Rs.5,50,000/- என வைத்துக்கொள்வோம், இதில் அவர்,
1)      தனது குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கு வருடத்திற்கு Rs.40,000/- செலுத்துகிறார். (School Fees Under 80C Section)
2)      Income tax 80C section Cover உடைய Life Insurance வருடத்திற்கு Rs.20,000/- செலுத்திகிறார்
3)      Income Tax 80G Register செய்யப்பட்ட காது கேளாத பள்ளிக்கு (Trust) நன்கொடையாக Rs.10,000/- கொடுக்கிறார்.
4)      தனது குடும்பத்திற்கு Medical Insurance வருடத்திற்கு Rs.15,000/- செலுத்தி வருகிறார்.
5)      அவரது வருமானத்தில் Provident Fund-க்கு Rs.21,600/- பிடித்தம் செய்யப்படுகிறது
6)      Pension-க்காக National Pension Scheme-ல் வருடத்திற்கு Rs.25,000/- Invest செய்கிறார்.

ராஜேஷ் உடைய Taxable Income கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வருட வருமானம்                                                        -              Rs.5,50,000/-
பள்ளி செலவு (-)                                                           -              Rs.40,000/- (Under 80C Section)
Life Insurance Investment (-)                                            -              Rs.20,000/- (Under 80C Section)
நன்கொடை (50% only) (-)                                           -              Rs.5,000/- (Under 80G Section)
Medical Insurance (-)                                                       -              Rs.15,000/- (Under 80D Section)
PF Deduction (-)                                                               -              Rs.21,600/- (Under 80C Section)
National Pension Investment (-)                                       -              Rs.25,000/- (Under 80CCD Section)
                                                                                                -------------------------------
பிடித்தம் செய்யவேண்டிய தொகை                      -              Rs. 1,26,600/-
                                                                                                ================
ராஜேஷ் உடைய வருட வருமானத்திலிருந்து (Rs.5,50,000/-) பிடித்தம் செய்யவேண்டிய தொகையை (Rs.1,26,600/-) கழித்து Rs.4,23,400/- Taxable Income-ஆக காண்பிக்கப்படும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ராஜேஷ் உடைய வருட வருமானம் என்பது, அவருடைய PF பிடித்தம் செய்வதற்கு முன்பாக உள்ள மாத சம்பளம், வங்கியில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை Savings Account-ல் Credit ஆகும் Interest, அவருக்கு சொந்த வீட்டின் மூலம் வரும் வாடகை, போன்ற அனைத்து விதமான Income-களும் அடங்கும்.

No comments:

Post a Comment