Tuesday, July 23, 2019

What is Advance Tax?




ADVANCE TAX (INCOME TAX)

தலைப்பே சொல்லிவுடும் Advance Tax என்றால் என்ன என்று, Advance Tax பற்றி மேலும் விரிவாக இந்த பதிவில் காணலாம்.

தனிநபருக்கோ அல்லது கம்பெனிகளுக்கு ஒரு வருடத்திற்கு உண்டான கட்ட வேண்டிய Income Tax Rs.10000/- அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர் Advance Tax கட்டவேண்டிய Rule க்கு கீழ் வருகிறார். மேலே கூறியபடி ஒரு வருடத்தின் Income Tax-ஐ வருடம் முழுவதும், Income Tax Act-ல் கூறியுள்ள Due Date மற்றும் Percentage படி, அந்த வருடத்திற்கு கட்ட வேண்டிய Income Tax-லிருந்து Part Payment ஆக Advance Tax கட்ட வேண்டும். இதன்படி கவனித்தால் Rs.10000/- க்கு மேல் Income tax கட்ட வேண்டியவர்கள் அந்த வருடத்திலேயே மொத்த Income Tax-யும் கட்டவேண்டியுள்ளது.

நீங்கள் மாத சம்பளம் வாங்கும் பட்சத்தில், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களது மாத சம்பளத்திலிருந்து Salary TDS வாயிலாக பிடித்தம் செய்து Income Tax department-க்கு கட்டிவிடும், எனவே மாத சம்பளம் மட்டும் வாங்கும் நபர் Advance Tax கட்ட வேண்டியது இல்லை. மாறாக மாத சம்பளம் மற்றும் Other Income (வாடகை, Etc.,) வரும் பட்சத்தில் நீங்களும் Advance கட்ட வேண்டியது வரும்.

எவ்வாறு Advance Tax Calculate செய்வது?: உங்களுடைய வருட Income-ஐ கணக்கில் எடுத்து, அனைத்து விதமான Deduction-களையும் செய்து, அந்த வருட Tax Rate-படி Income Tax கால்குலேட் செய்து அந்தந்த Due Date-க்குள் Percentage slab படி Advance Tax கட்ட வேண்டும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள Advance Tax Due Date மற்றும் Tax Percentage (FY 2019-20)
Due Date
Advance Tax Payable Percentage
on or before 15th-June
15% Advance Tax (Less Advance tax already Paid)
on or before 15th-September
45% Advance Tax (Less Advance tax already Paid)
on or before 15th-December
75% Advance Tax (Less Advance tax already Paid)
on or before 15th-March
100% Advance Tax (Less Advance tax already Paid)

தோராயமான Income முறையில் Income Tax file செய்யும் கம்பெனிகளுக்கு மட்டும், March-15th க்குள் 100% Advance Tax Payment செய்திருக்க வேண்டும்.

Advance Tax எவ்வாறு Payment செய்ய வேண்டும்? : அனைத்து விதமான Income tax-களையும் Online Banking மூலம் Payment செய்யலாம், Income Tax Challan No: 280 மூலம் Advance Tax Payment செய்ய வேண்டும்.

ஒரு வருடத்தில் கட்ட வேண்டிய income tax-க்கு அதிகமாக Advance Tax கட்டிவிட்டால், முறையாக Income Tax file செய்து Income Tax-லிருந்து வட்டியுடன் Refund பெற்றுக்கொள்ளலாம். இந்த Refund ஆனது Income Tax file செய்யும் பொழுது Return-ல் கொடுக்கப்பட்டிருக்கும் Bank Account-க்கு Credit ஆகிவிடும்.

மேலும் Advance Tax பற்றி சந்தேகம் ஏதாவது இருந்தால் Comment Box-ல் தெரிவிக்கவும்.

No comments:

Post a Comment