Wednesday, August 21, 2019

2017-18 GST Input Tax Credit taken due date 31.08.2019



GST INPUT TAX CREDIT TAKEN DUE DATE



GST சம்பந்தமாக கடந்த 24.06.2019 அன்று குஜராத் ஹைகோர்ட் AAP & Company, Chartered Accountants v/s Union of India வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளது. தற்பொழுது நடைமுறையில் நாம் File செய்து வரும் மாதாந்திர ரிடர்ன் GSTR3B GST Return இல்லை எனவும், Section 39-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி GSTR-3 மட்டுமே மாதாந்திர Return என தீர்ப்பு வழங்கியுள்ளனர், அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் 18-10-2018 அன்று September-2018 மாதத்திற்கு உண்டான GSTR3B file செய்ய வேண்டிய கடைசி தேதி 20-10-2018 எனவும், 2017-18-ம் வருட GST உள்ளீட்டு வரி (GST Input Tax) Claim செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் தினசரி நாளிதலில் Central Board of Indirect Taxes and Customs (CBIC) விளம்பரப்படுத்தியிருந்தனர். இந்த விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு குழப்பம் ஏற்ப்பட்டது, ஏனென்றால் Section 39 of CGST Act 2017 படி GSTR3 க்கு  Return மாற்றாக GSTR3B கொண்டுவந்ததுபோல இருந்தது.

GST வழக்கறினர்களின் வாதம்:

1) Section 16(4) of CGST Act 2017 படி ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பில்களுக்கு GST உள்ளீட்டு வரி பெறும் கடைசி தேதி என்பது அந்த வருடத்தின் Section 39-ன் படி கடைசி மாத Return அல்லது அந்த வருடத்தின் Annual Return, எது முதலில் File செய்கிறோமே அதுவே கடைசி தேதியாகும்.

2) Section 39 படி எந்த ஒரு பெயரும் Return-களுக்கு கொடுக்கப்படவில்லை, மேலும் 1) விற்பனை மற்றும் கொள்முதல் 2) உள்ளீட்டு வரி 3) செலுத்த வேண்டிய வரி ஆகியவை ஒரு ரிடர்ன் படிவத்தில் இருந்தால் அது Section 39 படி ரிடர்ன் ஆக ஏற்றுக்கொள்ளப்படும்

3) Form GSTR3B-ல் மேலே கூறியுள்ளபடி அனைத்தும் கொண்டுள்ளது எனவே GSTR3B ரிடர்ன் என எடுத்துக்கொள்ளலாம்

4) Order No: 12/2018 Central Tax Dated 31-12-2018 படி உள்ளீட்டு வரி பெற கடைசி தேதி மார்ச்-2019 என அதிகப்படுத்தி உள்ளது

குஜராத் ஹைகோர்ட் சாரம்சம்:

1) Section 39 படி GSTR3B ரிடர்ன் file செய்தால் மட்டுமே 18-10-2018 அன்று தினசரி நாளிதலில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் கூறியுள்ளது படி உள்ளீட்டுவரி பயன் பெற கடைசி தேதி ஆகும்.

2) GST மென்பொருள் (GST Software) குறைபாட்டால் GSTR2 மற்றும் GSTR3 file செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3) GSTR2 மற்றும் GSTR3 ரிடர்ன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், GSTR3B Return உருவாக்கப்பட்டது, மேலும் இது GSTR3 ரிடர்ன்க்கு மாற்றாகவே கொண்டுவரப்பட்டது.

4) Section 39 படி GSTR3 Return file செய்ய வேண்டிய காலக்கெடுவை Central Board of Indirect Tax and Customs (CBIC) ஆனது அவ்வப்போது Order/ Notification கொடுத்து மாற்றி வருகிறார்கள்.  

குஜராத் ஹைகோர்ட் தீர்ப்பு:
செக்சன் 39 படி GSTR3B படிவம் மாதாந்திர படிவமாக ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் 18-10-2018 என்று CBIC ஆல் கொடுக்பட்ட விளம்பரம் Section 16(4) மற்றும் Section 39(1) க்கு எதிரானது எனவும் தீர்ப்பு கொடுத்துள்ளனர்.

மேற்கூறிய தீர்ப்புபடி பார்த்தால் GSTR3B படிவம் மாதாந்திர ரிடர்ன் இல்லை என்று ஆகும் பொழுது, 1) மார்ச் 2018-ம் மாதத்திற்கு உண்டான GSTR3 Due Dateஅல்லது 2) 2017-18-ம் வருடத்திற்கு உண்டான Annual Return due date, இதில் எந்த தேதி முதலில் வருகிறதோ அந்த தேதியானது 2017-18 ஆம் வருடத்திற்கு உண்டான உள்ளீட்டு வரி பயன் பெற கடைசி தேதியாகும், தற்பொழுது மார்ச் 2018-ம் மாதத்திற்கு உண்டான GSTR3 Due Date இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் 2017-18 க்கு உண்டான Annual Return Due date ஆனது 31-08-2019 அன்றுடன் முடிவதாக உள்ளது. எனவே 31-08-2019 வரை 2017-18 ஆம் வருடத்திற்கு உண்டான உள்ளீட்டு வரியை அனுபவிக்கலாம் என மறைமுகமாக தீர்ப்பில் உள்ளது.

மேலே சொன்னவை எனது கருத்தாகும், இதனை தங்களது GST Legal Advisor-இடம் கேட்டு உறுதிப்படித்திக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சந்தேகங்கள் இருந்தால் கமென்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.

Monday, August 19, 2019

Income Tax Section 80D



INCOME TAX DEDUCTION SECTION 80D



அப்பா, அம்மா, கணவன் அல்லது மனைவி, குழந்தைகள்... இவர்களுக்காக எடுத்துள்ள மருத்துவக்காப்பீட்டு பிரீமியங்களை (Mediclaim Premium) மட்டுமே வருமான வரிச்சட்டம் 80D Section-படி வரிக்கழிவுக்குக் காட்டமுடியும். சகோதரர், சகோதரிக்கு எடுக்கும் மருத்துவக் காப்பீடுகளுக்கு இந்த செக்‌ஷனைப் பயன்படுத்தமுடியாது. மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியம் என்றில்லாமல், உங்களைச் சார்ந்துவாழும் சகோதர, சகோதரிகளின் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு 80DD, 80DDB செக்‌ஷன்படி வருமான வரிக்கழிவு பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

பார்வையின்மை, நடக்கமுடியாதபடி முடக்கிப்போடும் வியாதிகள், ஆட்டிசம் போன்ற உடல்நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னொருவரைச் சார்ந்தே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தொடர் சிகிச்சை எடுக்கவேண்டிய கட்டாயமும்கூட இருக்கிறது. அது அவர்களுக்கும், அவர்களைப் பாதுகாப்பவர்களுக்கும் பெரிய நிதிச்சுமையாக அமையக்கூடும். எனவே, அந்த நிதிச்சுமையைக் குறைக்கும்விதமாக வருமான வரிக்கழிவுக்கு வழிவகுத்துள்ளார்கள். வருமானவரிச்சட்டம் 80DD செக்ஷன்படி, செவித்திறன் குறைபாடு, மனநலக் குறைபாடு, மன நோய், ஆட்டிசம், பெருமூளை வாதம், பார்வையின்மை, குறைவான பார்வை, தொழுநோய் போன்றவற்றுக்கான மருத்துவ சிகிச்சை செலவுகளை வருமான வரிக்கழிவுக்குக் காட்ட இயலும். அதற்கென சில விதிமுறைகளை வகுத்துள்ளார்கள்.


உடல்நலப் பாதிப்பு, குறைந்தபட்சம் 40 சதவிகிதம் என்ற அளவில் இருக்குமென்றால் ரூ.75,000 வரையிலும், குறைந்தபட்சம் 80 சதவிகிதம் என்ற அளவில் இருக்குமென்றால் ரூ.1,25,000 வரையிலும் வரிக்கழிவுக்குக் கணக்கில் காட்டலாம். மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு Claim செய்வதற்கு தலைமை அரசு மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை குறித்த அத்தாட்சிச் சான்றிதழும் (Form 10-IA), நியூராலஜிஸ்ட் ஒருவரிடம் சிகிச்சை சான்றிதழும் வாங்க வேண்டும். குழந்தைக்கான சிகிச்சையெனில் குழந்தை நல மருத்துவரின் அத்தாட்சிச் சான்றிதழ் தேவை. மருத்துவச்சான்றிதழ் மட்டுமின்றி ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு Form 10-IA விண்ணப்பம், சுய அறிவிப்புச் சான்றிதழ் (Self-Declaration Certificate) போன்றவை தேவைப்படும்.


அடுத்ததாக, வருமான வரிச்சட்டம் 80DDB செக்ஷன்படி, முற்றிய நிலையிலுள்ள அதிதீவிரமான நோய்களுக்கான சிகிச்சை செலவுகளுக்கு வரிக்கழிவு பெறமுடியும். டிமென்ஷியா, கோரியா உள்ளிட்ட நரம்பு தொடர்பான நோய்கள், வீரியமான புற்றுநோய், ஹெச்.ஐ.வி, சிறுநீரகச் செயலிழப்பு, ரத்தம் உறையாமை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரிக்கழிவு பெறலாம்.

இதற்காக விண்ணப்பிக்கும்போது அந்தந்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களின் அத்தாட்சிச் சான்றிதழ்கள் அவசியம். வயதைப் பொறுத்து வரிக்கழிவு விகிதம் வேறுபடும். பொதுவாக அதிகபட்சம் 40,000 ரூபாய் வரையிலும், முதியவர்கள் எனில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் சிகிச்சைக்கான செலவுக்கு வருமான வரிக்கழிவு பெற விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகமிருந்தாலோ, கூடுதல் விவரங்களைப் பெற விரும்பினாலோ, ஆடிட்டர் ஒருவரை நேரில் சந்தித்து விவரங்களைப் பெறுவது நல்லது.

Friday, August 16, 2019

Income Tax Deduction AY 2020-21



ASSESSMENT YEAR 2020-21 INCOME TAX DEDUCTION

ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான சம்பள வருமானத்துக்கு வருமான வரி கிடையாது என்ற இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு, எந்தவித மாற்றமும் இன்றி 2019-20 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மின் வாகனம் வாங்க பெறப்படும் கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சமும், நடப்பு நிதியாண்டில் பெறப்போகும் ரூ.45 லட்சத்துக்குக் குறைவான விலைகொண்ட வீட்டுக் கடனுக்கான வட்டிக்குக் கூடுதலாக ரூ.1.5 லட்சமும் புதிய வரிச்சலுகைகளாகும்.

வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable Income):
சம்பள வருமானம் என்பது அடிப்படை சம்பளம் (Basic Salary), அகவிலைப் படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகளும் (Other Perks) சேர்ந்தது. இந்த மொத்த சம்பளத்தில், GPF, CPF, CPS, NPS, மருத்துவக் காப்பீட்டு (Mediclaim) பிரீமியம், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் (Life Insurance) போன்றவற்றுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இந்த வரிச்சலுகையுடன், நீங்கள் மேற்கொள்ளும் வரிச் சலுகைக்குரிய இதர செலவு மற்றும் சேமிப்பு வகைகளிலும் Deduction செய்ததுபோக உள்ள நிகர வருமானத்துக்கே வருமான வரி கட்ட வேண்டும். இதுதான் வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable Income) எனப்படும்.

எனவே, நடப்பு நிதி ஆண்டில் சம்பளதாரர்களின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்த்து, அதற்கான வரியைச்செலுத்தத் தயாராகுங்கள். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் அடங்கும்பட்சத்தில் நீங்கள் வரி எதனையும் கட்ட வேண்டியதில்லை என்பதை மறக்காதீர்கள்.

கடைசி நேரத்தில் ரூ.5 லட்சம் என்று வராமல், ரூ.5,00,010 என்று வந்துவிட்டால், வருமான வரியாக ரூ.12,502-ம், அதற்கான 4% தீர்வையாக ரூ.500-ம் செலுத்த வேண்டிவரும். வெறும் பத்து ரூபாய் கூடுதல் வருமானத்துக்கு 13,002 ரூபாயை வரியாகச் செலுத்த வைத்துவிடும்.

                வரிச் சலுகைகளைப் பொறுத்தவரை கவலைக்குரிய ஒரு செய்தி என்னவென்றால், சம்பளதாரர்களில் பலரும் தங்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF, காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியம் போன்ற கட்டாயப் பிடித்தங்களை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள். சம்பளப் பிடித்தத்தையும் தாண்டி சேமிப்பு மற்றும் முதலீடு செய்வோர் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கின்றனர். இவ்வாறு சம்பளப் பிடித்தம் மட்டுமே கொண்ட சம்பளதாரர்கள் தங்களின் நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டாமல் இருக்கிறதா என்பதை மிகச் சரியாகக் கணக்கிட்டுப் பார்த்துவிடுவது, வரிச் சலுகையைத் தவறவிடாமல் பெறுவதற்கு அவசியம்.

பொதுவான வரிச் சலுகைகள்:
வருமான வரிப் பிரிவானது, 80C முதல் 80U வரையிலும் மற்றும் பிரிவு 10(13), பிரிவு 24 ஆகியவற்றையும் சேர்த்து சுமார் ரூ. 21 லட்சம் அளவுக்கு வரிச் சலுகைகள் தந்துள்ளபோதிலும், அத்தனை சலுகைகளையும் அனைவரும் பெற இயலாது.
அனைவருக்கும் பொதுவான சலுகை என்பது பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.5 லட்சம், பிரிவு 80CCD (1B)-யின்கீழ் ரூ.50,000 மற்றும் பிரிவு 80D-ன் கீழ் ரூ.50,000 ஆக ரூ.2.5 லட்சம் மட்டுமே அனைவருக்குமான பொதுவான சலுகை.
இவற்றுடன் பிரிவு 16-ன்கீழ் தரப்படும் Standard Deduction Rs.50,000 ரூபாயையும் சேர்த்தால், சம்பளதாரர்களுக்குப் பொதுவான சலுகை ரூ.3 லட்சம் மட்டுமே. ஆனால், இந்த ரூ.3 லட்சம் வரிச் சலுகையைப் பயன்படுத்த வேண்டியவர்களில் பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை என்பதே இப்போதைய நிலை.
பதவிக் காலத்தில் இருந்த வாழ்க்கை நிலைக்குச் சமமாக ஓய்வுக்கால வாழ்வும் தொடரவேண்டுமானால், அதற்கான சேமிப்பு நிதி சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
நீண்டுவரும் ஓய்வுக்கால வாழ்நாள் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள பழைய பென்ஷன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அடிப்படைச் சேமிப்பு நிதியைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. அவ்வாறு கடைப்பிடித்தால் ஓய்வுக்காலத்துக்கான நிதி போதுமான அளவுக்குக் குவியும். நடப்பு நிதியாண்டில் வரியில்லா வருமானச் சலுகையும் கிடைக்கும். அதற்கான சுருக்கமான கணக்கீடு இதோ...

மொத்த சம்பள வருமானம் : ரூ.8 லட்சம்
(-) Standard Deduction : ரூ. 0.5 லட்சம்
(-) 80C சேமிப்பு : ரூ.1.5 லட்சம்
(-) 80CCD (1B) : ரூ.0.5 லட்சம்
(-) 80D காப்பீடு : ரூ.0.5 லட்சம்
Total Deduction : ரூ.3 லட்சம்
நிகர வருமானம் : ரூ.5 லட்சம்.
எனவே, வரித் தள்ளுபடி கிடைத்துவிடும்.

இந்த பதிவு, கணக்கீடுகள் எல்லாம் கட்டாயமாக வரிச் சலுகை பெறுவதற்காக அல்ல. ரூ.5 லட்சம் தொடப்போகும் அல்லது வாங்கும் ஒரு சம்பளதாரர் தனது சம்பள வருமானத்தின் அனைத்து வகைகளையும் விட்டுவிடாமல் கணக்கீடு செய்ய மட்டுமே.

கூடுதல் சம்பளம் பெறுவோர், சம்பளப் பிடித்தத்துக்கு வெளியே எவ்வளவு சேமிப்பு செய்தால் வரிச் சலுகை பெறலாம் என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

சம்பள வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட வகையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத தால், வரிச் சலுகை வாய்ப்பை இழந்து விட்டோமே என்ற கடைசி நேர தவிப்பைத் தவிர்க்க மேற்சொன்ன கணக்கீடுகள் ஓரளவுக்கு உதவக்கூடும்.

80C பிரிவு தரும் ரூ.1.5 லட்சம் சேமிப்பை செய்ய 19 வகையான சேமிப்பு வகைகளை ஒருவர் நாடலாம். இதில் கல்விச் செலவு மற்றும் வீட்டுக் கடன் அசல் (Home Loan Re-Payment) போக மிஞ்சிய 17 சேமிப்பு வகைகள் அனைவருக்கும் பொதுவானவை. நீண்ட கால சேமிப்பு தேவையெனில் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF), சுகன்யா சம்ருதி திட்டம் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எனக்கு அவ்வப்போது பணம் தேவைப்படும், அவ்வப்போது சேமிக்கவும் முடியும் என நினைக்கிறவர்கள் தேசிய சேமிப்புப் பத்திரம், அஞ்சலக ஐந்தாண்டுக்கால டைம் டெபாசிட், அனுமதிக்கப்பட்ட ஐந்தாண்டுக்கால வங்கி டெபாசிட் முதலியவற்றைப் பரிசீலிக்கலாம்.

நிகர வருமானம் அதாவது, சம்பளப் பிடித்தம் போக உள்ள வருமானம், ரூ.5,12,000 என்று இருக்குமேயானால், அவர்களும்கூட சற்றே முயற்சி செய்து மாதம் 1,000 ரூபாயைச் சேமித்தால், ரூ.27,496 பணப்பலனாகப் பெறலாமே! (சேமிப்பு : ரூ.12,000 + வரிச் சலுகை: ரூ.15,496 = மொத்த பணப்பலன்: ரூ.27,496)

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கடந்து விட்டது. எஞ்சியுள்ள மூன்று காலாண்டுக்கு இப்போதே திட்டமிட்டு முதலீடு செய்தால், கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.

நன்றி: விகடன்

Friday, August 9, 2019

How to file Income Tax Return in Tamil



HOW TO FILE INCOME TAX RETURN ONLINE

                வரும் 31.08.2019 வரை Income Tax Return file செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் கட்டாயம் வருமான Income Tax Return file செய்ய வேண்டும். ஆன்லைனிலேயே Income Tax Return file செய்யமுடியும் என்றாலும், அதற்கான நடைமுறைகள் தெரியாமல் பலரும் தவிக்கிறார்கள்.
Online Income Tax Return file செய்வதற்கு முன்பாக உங்களது 1) Form-16 (நீங்கள் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்), 2) PAN Card, 3) Aadhar Card, நீங்கள் வைத்திருக்கும் அனைத்து வகையான 4) Bank Account Details (Bank Account No and Bank IFSC Code) ஆகியவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.
நீங்களே Online மூலம் உங்களது Computer அல்லது Browsing Centre-லியோ Income Tax Return file செய்யமுடியும். ஆனால், சிலவற்றுக்கு Income Tax Act 44AB என்ற Section மூலம் File செய்ய வேண்டி இருந்தால் Chartered Accountant சரிபார்த்து Certificate தரவேண்டி இருக்கும். அவற்றுக்கு மட்டுமே தனி நபரால் Income Tax Return file செய்ய முடியாது. ஒருவருடைய ஆண்டு வருமானம் அல்லது ஆண்டு Turnover அல்லது Sales ஒரு கோடி ரூபாய்க்குமேல் இருந்தால், அவருக்கான Income Statement-களை ஆடிட்டர் சரிபார்த்து Certificate அளித்த பின்னர்தான் தாக்கல் செய்யமுடியும். ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களே Income Tax Return file செய்யலாம்.


முதலில் Income Tax (https://www.incometaxindiaefiling.gov.in/home) இணையதளத்தில், உங்களுடைய தனிப்பட்ட Details Enter செய்து உங்களது Username and Password Create செய்ய வேண்டும். அதற்கு, நீங்கள் தனிநபரா, கூட்டுக்குடும்பமா என்றெல்லாம் Option இருக்கும். அதற்கு சரியானதைத் தேர்வு செய்து, அதன்பின் PAN Card எண், பெயர், பிறந்த தேதி, இந்தியாவில் வசிப்பவரா அல்லது வெளிநாட்டில் வசிப்பவரா என்பது போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். அடுத்து மொபைல் எண், e-Mail Address போன்ற விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.
மொபைல் எண்ணை உறுதிப்படுத்த One Time Password (OTP) வரும். அதேபோல், e-Mail Address உறுதிப்படுத்த முதலில் ஒரு Activation Link உங்களது Mail-க்கு வரும், உங்களது Activation Link Receive செய்ய தாமதம் ஆனால், SPAM Box folder-ல் Check செய்யவும், Mail-லும் ஒரு One Time Password (OTP) வரும். இரண்டு One Time Password (OTP) பதிவுசெய்து Password Create செய்து கொள்ள வேண்டும்.


அதன்பின்னர், இணையதளத்தில் Log in செய்ததும் Next Page திறக்கும்.


அந்தப் பக்கத்தில் e-File என்ற Link-ஐ Clik செய்யவும். Click செய்ததும் கீழ்க்கண்ட Page Load ஆகும் உங்களுடைய PAN No Automatic ஆக Edit செய்ய முடியாதவாறு Show ஆகும்.


அதில், நீங்கள் Income Tax Return file செய்யும் Assessment Year (தற்பொழுது 2019-20) தேர்வுசெய்ய வேண்டும். அடுத்து, நீங்கள் உங்களது சம்பள கணக்குகளை மட்டும் file செய்ய வேண்டி இருந்தால் ITR-1 Form-ஐ தேர்வு செய்ய வேண்டும். `Submission mode' என்ற Option-ல் Prepare and Submit Online அல்லது XML Upload என்பதைத் தேர்வுசெய்து continue கொடுங்கள். தற்பொழுது Offline ஆக இல்லாமல் Online முறையில் ITR -1 file செய்வதை பார்ப்பதால், Prepare and Submit என்பதைத் தேர்வுசெய்து continue கொடுங்கள், ITR-1 Online  பார்ம் கிடைக்கும்.
இதற்கு முன்னர் உங்களது Form 26AS ஐ Check செய்து கொள்ள வேண்டும், இதில் தான் உங்களுக்கு ஒருவருடத்தில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் file செய்த Salary and TDS Details, மேலும், உங்களுக்கு Bank-ன் மூலம் வட்டி கிடைத்திருந்தால் அதன் Details இருக்கும், எனவே முதலில் உங்களுடைய Form 26AS view செய்து பார்த்து, ஏதேனும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வந்திருப்பின் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது Bank-க்கு தெரிவித்து மீண்டும் Revised return file செய்ய சொல்ல வேண்டும், இல்லையென்றால் உங்களது அந்த வருடத்திற்குறிய file செய்த Income Tax Return ஆனது Reject செய்ய வாய்ப்பு உள்ளது.
Form 26AS View செய்ய மேலே படத்தில் உள்ள “My Account” menu click செய்து, View Form 26AS (Tax Credit) Option select செய்தால் புதிய Window open ஆகி, அதில் உள்ள முதல் menu-வில், view my 26AS Click செய்து, சரியான Year Select செய்து Submit கொடுத்தால், உங்களது Form 26AS Statement view ஆகும், இதனை PDF file format-ல் Download செய்து கொள்ளலாம்.



மேலே கூறியபடி, Assessment Year, Form Type and Online Mode Select செய்த உடன், மேலே உள்ளபடி General Instruction TAB தெரிய வரும், இதில் உங்களுக்கான Return file செய்வதற்குறிய General Instruction இருக்கும், நீங்கள் ஒவ்வொரு Tab அல்லது Page Entry செய்து முடிக்கும் பொழுது Save Draft Button-ஐ Click செய்து Save செய்து கொள்ளவும்.

 


அடுத்த TAB Part A: General Information Section, இதில் உங்களது PAN No, Name, Address, Mobile No, Mail ID Default உங்களது Profile அல்லது கடைசி Income Tax Return Base செய்து display செய்திருக்கும். இதனை நீங்கள் மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.






அடுத்து computation of income and tax என்ற Menu Click செய்யுங்கள். அதில், உங்களது மாதச்சம்பளம், Bank Interest வருமானம், இதர வைப்பு நிதி வருமானம், சொந்தமாக வீடு இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானம், Bank Home Loan பெற்றிருந்தால் அதற்கான வட்டி, வேறு ஏதேனும் முதலீடுகள் செய்திருந்தால் அந்த விவரங்கள், காப்பீடுகள், வருமான வரிச்சட்டம் 80D பிரிவுக்கான சலுகை விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். பெரும்பாலும் இது ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக்கும். ஏதேனும் விடுபட்டிருந்தால் நிரப்பிக்கொள்ளுங்கள். உங்கள் மொத்த வருமானம், கழிவுகள் போக நீங்கள் கட்ட வேண்டிய வரி அல்லது உங்களுக்கு ரிட்டனாகும் தொகை குறித்த விவரங்களும் அதில் இருக்கும்.



அடுத்த Tab Tax details. இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை, TDS விவரங்கள் இந்தப் பக்கத்தில் இருக்கும். முக்கியமாக இதில் ஏற்கனவே கூறியபடி, உங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகை அனைத்தும் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும், ஏனெனில் உங்களுக்கு Tax Refund இருக்கும் பட்சத்தில், உங்களது PAN கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட அனைத்து தொகையும் இந்த Page-ல் Display இருந்தால் மட்டுமே எந்த பிரச்சனை இல்லாமல் Refund கிடைக்கும்.



அடுத்த மெனு, Taxes paid and verification. இந்தப் பக்கத்தில் நீங்கள் கட்ட வேண்டிய தொகை அல்லது ரிட்டனாகும் தொகை, உங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள் இருக்கும். உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருப்பின் அனைத்தையும் இந்த பக்கத்தில் தெரிவிக்கவும், மேலும் நீங்கள் Refund பெற வேண்டிய வங்கி கணக்கையும் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது Return எந்த முறையில் Verification செய்ய உள்ளீர்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.




அடுத்த மெனு Donations 80G. நீங்கள் ஏதேனும் தொண்டு நிறுவனத்துக்கோ, அல்லது தேசிய பேரிடர்களின்போது முதல்வர் அல்லது பிரதமர் நிவாரண நிதிகளுக்கோ நன்கொடை அளித்திருந்தால் அவற்றை இந்தப் பக்கத்தில் பதிவிட வேண்டும். இந்த நன்கொடைகளுக்கு 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை Tax Deduction உண்டு. அரசு சார்ந்த அமைப்புகளுக்கான நன்கொடைகளுக்கு 100 சதவிகித வரிக்கழிவு கிடைக்கலாம். தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தால் 50 சதவிகிதம் Deducion வழங்கப்படும். நன்கொடை அளித்த நிறுவனத்திடம் நீங்கள் நன்கொடை அளித்ததற்கு உண்டான ரசீது, 80G தொடர்பான சான்றிதழ் பெறுவது அவசியம். அந்த நிறுவனத்தின் பான் கார்டு மற்றும் முகவரியைப் பதிவுசெய்ய வேண்டும்.



அடுத்துள்ள TAB Donations 80GGA. அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு நன்கொடை வழங்கியிருந்தால் இந்த மெனுவில் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். நன்கொடைகள் குறித்து நீங்கள் செய்யும் பதிவுகள், Taxes paid and verification பக்கத்தில் பதிவாகிக்கொண்டே வரும். எல்லாப் பதிவுகளையும் முடித்தபிறகு, எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து Taxes paid and verification பக்கத்துக்கு வந்து preview and submit பட்டனை அழுத்த வேண்டும். நீங்கள் ஏதேனும் விவரங்களைப் பதிவு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே உங்களுக்குச் சுட்டிக்காட்டும். எல்லாம் நிறைவாகப் பதிவு செய்திருந்தால் சப்மிட் ஆகிவிடும்.

இதோடு முடிந்துவிடாது. இன்னும் ஒரு முக்கியப் பணி இருக்கிறது. கணக்கைத் தாக்கல் செய்தது நீங்கள் தான் என்பதை உறுதிசெய்ய e-Verification செய்ய வேண்டும். Income Tax Return file செய்ததும் e-Verification என்றொரு Menu உங்கள் பார்வைக்கு வரும். அதில் மூன்று Option தரப்பட்டிருக்கும். மூன்றாவதாக உள்ள `Aadhar Card வழியாக e-Verification செய்யும்' பட்டனை அழுத்தினால் ஆதார் கார்டில் இணைத்துள்ள மொபைல் நம்பருக்கு ஒரு One Time Password வரும். அதை அந்தப் பக்கத்தில் பதிவு செய்து Submit கொடுத்தால் முடிந்தது அல்லது நீங்கள் Online வங்கி கணக்கு வைத்திருந்தால் அதன் மூலமும் e-Verification செய்யலாம். நீங்கள் எந்த மெயிலை வருமான Income Tax Profile-ல் பதிவு செய்திருக்கிறீர்களோ, அந்த மெயிலுக்கு நீங்கள் Income Tax Return file செய்ததற்கு உண்டான சான்றிதழ் வந்துவிடும்.
நீங்கள் கூடுதலாக வரி கட்ட வேண்டியிருந்தால் ஆன்லைனிலேயே கட்டிவிடலாம். உங்களுக்கு பணம் ரிட்டனாகும் வாய்ப்பிருந்தால் நீங்கள் தந்துள்ள வங்கிக்கணக்குக்கு தானாக வந்துவிடும். மாதச்சம்பளம் பெறுபவருக்கு ஒரு வீடு மட்டும் சொந்தமாக இருக்கும்வரை ITR-1 படிவமே போதுமானது. குறைவான வருமானமுள்ள சிறு விற்பனையாளர்களாக இருந்தால் ITR-4 என்ற படிவத்தின்மூலம் வருமான வரித்தாக்கல் செய்யலாம்.

மேலும் சந்தேகங்கள் இருப்பின் Comment Box-ல் தெரிவிக்கவும். இந்த பதிவை மற்றவர்களுக்கு Share செய்வதன் மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள்.