ASSESSMENT YEAR 2020-21 INCOME
TAX DEDUCTION
ஐந்து
லட்சம் ரூபாய் வரையிலான சம்பள வருமானத்துக்கு வருமான வரி கிடையாது என்ற இடைக்கால பட்ஜெட்
அறிவிப்பு, எந்தவித மாற்றமும் இன்றி 2019-20 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டில்
உறுதி செய்யப்பட்டுள்ளது. மின் வாகனம் வாங்க பெறப்படும் கடனுக்கான வட்டியில் ரூ.1.5
லட்சமும், நடப்பு நிதியாண்டில் பெறப்போகும் ரூ.45 லட்சத்துக்குக் குறைவான விலைகொண்ட
வீட்டுக் கடனுக்கான வட்டிக்குக் கூடுதலாக ரூ.1.5 லட்சமும் புதிய வரிச்சலுகைகளாகும்.
வரிக்கு
உட்பட்ட வருமானம் (Taxable Income):
சம்பள
வருமானம் என்பது அடிப்படை சம்பளம் (Basic Salary), அகவிலைப் படி, வீட்டு வாடகைப்படி
உள்ளிட்ட பல்வேறு படிகளும் (Other Perks) சேர்ந்தது. இந்த மொத்த சம்பளத்தில், GPF,
CPF, CPS, NPS, மருத்துவக் காப்பீட்டு (Mediclaim) பிரீமியம், ஆயுள் காப்பீட்டு பிரீமியம்
(Life Insurance) போன்றவற்றுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இந்த வரிச்சலுகையுடன்,
நீங்கள் மேற்கொள்ளும் வரிச் சலுகைக்குரிய இதர செலவு மற்றும் சேமிப்பு வகைகளிலும் Deduction
செய்ததுபோக உள்ள நிகர வருமானத்துக்கே வருமான வரி கட்ட வேண்டும். இதுதான் வரிக்கு உட்பட்ட
வருமானம் (Taxable Income) எனப்படும்.
எனவே,
நடப்பு நிதி ஆண்டில் சம்பளதாரர்களின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதைத் துல்லியமாகக்
கணக்கிட்டுப் பார்த்து, அதற்கான வரியைச்செலுத்தத் தயாராகுங்கள். உங்கள் வருமானம் ரூ.5
லட்சத்துக்குள் அடங்கும்பட்சத்தில் நீங்கள் வரி எதனையும் கட்ட வேண்டியதில்லை என்பதை
மறக்காதீர்கள்.
கடைசி
நேரத்தில் ரூ.5 லட்சம் என்று வராமல், ரூ.5,00,010 என்று வந்துவிட்டால், வருமான வரியாக
ரூ.12,502-ம், அதற்கான 4% தீர்வையாக ரூ.500-ம் செலுத்த வேண்டிவரும். வெறும் பத்து ரூபாய்
கூடுதல் வருமானத்துக்கு 13,002 ரூபாயை வரியாகச் செலுத்த வைத்துவிடும்.
வரிச்
சலுகைகளைப் பொறுத்தவரை கவலைக்குரிய ஒரு செய்தி என்னவென்றால், சம்பளதாரர்களில் பலரும்
தங்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF, காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியம் போன்ற
கட்டாயப் பிடித்தங்களை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள். சம்பளப் பிடித்தத்தையும் தாண்டி
சேமிப்பு மற்றும் முதலீடு செய்வோர் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கின்றனர். இவ்வாறு
சம்பளப் பிடித்தம் மட்டுமே கொண்ட சம்பளதாரர்கள் தங்களின் நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத்
தாண்டாமல் இருக்கிறதா என்பதை மிகச் சரியாகக் கணக்கிட்டுப் பார்த்துவிடுவது, வரிச் சலுகையைத்
தவறவிடாமல் பெறுவதற்கு அவசியம்.
பொதுவான
வரிச் சலுகைகள்:
வருமான வரிப் பிரிவானது, 80C முதல்
80U வரையிலும் மற்றும் பிரிவு 10(13), பிரிவு 24 ஆகியவற்றையும் சேர்த்து சுமார் ரூ.
21 லட்சம் அளவுக்கு வரிச் சலுகைகள் தந்துள்ளபோதிலும், அத்தனை சலுகைகளையும் அனைவரும்
பெற இயலாது.
அனைவருக்கும் பொதுவான சலுகை என்பது
பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.5 லட்சம், பிரிவு 80CCD (1B)-யின்கீழ் ரூ.50,000 மற்றும்
பிரிவு 80D-ன் கீழ் ரூ.50,000 ஆக ரூ.2.5 லட்சம் மட்டுமே அனைவருக்குமான பொதுவான சலுகை.
இவற்றுடன் பிரிவு 16-ன்கீழ் தரப்படும்
Standard Deduction Rs.50,000 ரூபாயையும் சேர்த்தால், சம்பளதாரர்களுக்குப் பொதுவான
சலுகை ரூ.3 லட்சம் மட்டுமே. ஆனால், இந்த ரூ.3 லட்சம் வரிச் சலுகையைப் பயன்படுத்த வேண்டியவர்களில்
பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை என்பதே இப்போதைய நிலை.
பதவிக்
காலத்தில் இருந்த வாழ்க்கை நிலைக்குச் சமமாக ஓய்வுக்கால வாழ்வும் தொடரவேண்டுமானால்,
அதற்கான சேமிப்பு நிதி சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
நீண்டுவரும்
ஓய்வுக்கால வாழ்நாள் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள பழைய பென்ஷன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு
அடிப்படைச் சேமிப்பு நிதியைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. அவ்வாறு கடைப்பிடித்தால்
ஓய்வுக்காலத்துக்கான நிதி போதுமான அளவுக்குக் குவியும். நடப்பு நிதியாண்டில் வரியில்லா
வருமானச் சலுகையும் கிடைக்கும். அதற்கான சுருக்கமான கணக்கீடு இதோ...
மொத்த சம்பள வருமானம் : ரூ.8 லட்சம்
(-) Standard Deduction : ரூ.
0.5 லட்சம்
(-) 80C சேமிப்பு : ரூ.1.5 லட்சம்
(-) 80CCD (1B) : ரூ.0.5 லட்சம்
(-) 80D காப்பீடு : ரூ.0.5 லட்சம்
Total Deduction : ரூ.3 லட்சம்
நிகர வருமானம் : ரூ.5 லட்சம்.
எனவே, வரித் தள்ளுபடி கிடைத்துவிடும்.
இந்த பதிவு, கணக்கீடுகள் எல்லாம்
கட்டாயமாக வரிச் சலுகை பெறுவதற்காக அல்ல. ரூ.5 லட்சம் தொடப்போகும் அல்லது வாங்கும்
ஒரு சம்பளதாரர் தனது சம்பள வருமானத்தின் அனைத்து வகைகளையும் விட்டுவிடாமல் கணக்கீடு
செய்ய மட்டுமே.
கூடுதல்
சம்பளம் பெறுவோர், சம்பளப் பிடித்தத்துக்கு வெளியே எவ்வளவு சேமிப்பு செய்தால் வரிச்
சலுகை பெறலாம் என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
சம்பள
வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட வகையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத தால், வரிச் சலுகை
வாய்ப்பை இழந்து விட்டோமே என்ற கடைசி நேர தவிப்பைத் தவிர்க்க மேற்சொன்ன கணக்கீடுகள்
ஓரளவுக்கு உதவக்கூடும்.
80C பிரிவு
தரும் ரூ.1.5 லட்சம் சேமிப்பை செய்ய 19 வகையான சேமிப்பு வகைகளை ஒருவர் நாடலாம். இதில்
கல்விச் செலவு மற்றும் வீட்டுக் கடன் அசல் (Home Loan Re-Payment) போக மிஞ்சிய 17 சேமிப்பு
வகைகள் அனைவருக்கும் பொதுவானவை. நீண்ட கால சேமிப்பு தேவையெனில் பப்ளிக் பிராவிடன்ட்
ஃபண்ட் (PPF), சுகன்யா சம்ருதி திட்டம் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனக்கு
அவ்வப்போது பணம் தேவைப்படும், அவ்வப்போது சேமிக்கவும் முடியும் என நினைக்கிறவர்கள்
தேசிய சேமிப்புப் பத்திரம், அஞ்சலக ஐந்தாண்டுக்கால டைம் டெபாசிட், அனுமதிக்கப்பட்ட
ஐந்தாண்டுக்கால வங்கி டெபாசிட் முதலியவற்றைப் பரிசீலிக்கலாம்.
நிகர வருமானம்
அதாவது, சம்பளப் பிடித்தம் போக உள்ள வருமானம், ரூ.5,12,000 என்று இருக்குமேயானால்,
அவர்களும்கூட சற்றே முயற்சி செய்து மாதம் 1,000 ரூபாயைச் சேமித்தால், ரூ.27,496 பணப்பலனாகப்
பெறலாமே! (சேமிப்பு : ரூ.12,000 + வரிச் சலுகை: ரூ.15,496 = மொத்த பணப்பலன்: ரூ.27,496)
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு
கடந்து விட்டது. எஞ்சியுள்ள மூன்று காலாண்டுக்கு இப்போதே திட்டமிட்டு முதலீடு செய்தால்,
கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.
நன்றி: விகடன்